Wednesday, April 04, 2007

323. வருடாந்திர Appraisal - மேலாளர்களுக்கு குறிப்புகள் - பாகம் 1

நேற்று அப்ரைசல் பற்றிய ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். பொதுவாக, இது போன்றவை, கொஞ்ச நேரத்திலேயே எனக்கு போரடிக்கத் தொடங்கி விடும். பயிற்சியாளர் திறமை மிக்கவராக / நல்ல பேச்சாளராக இருந்த காரணத்தால், மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. வகுப்பு நல்ல interactive ஆக இருந்தது. தான் முன் வைத்த பாயிண்ட்டுகளை விளக்க அவர் கூறிய குட்டிக் கதைகளும், மேற்கோள் காட்டிய உதாரணங்களும் சுவையாக இருந்தன. அதிலிருந்து சில குறிப்புகளை இப்பதிவில் தருகிறேன்.

1. நமக்குக் கீழே பணி புரியும் ஒரு மென்பொருளாளரை மதிப்பிடுவது அல்ல அப்ரைசல், அவரது கடந்த வருட பணி குறித்த மதிப்பீடே அப்ரைசல் என்பதற்கு பல மேலாளர்கள் முக்கியத்துவம் தருவதில்லை. அவரது அந்த ஆண்டு performance-ஐ, அந்த நபர், அவருக்கு அளிக்கப்பட்ட பணியை, நேர்மையாக, அவரது திறமைக்கு ஏற்ற வகையில் செய்தாரா (to the best of his/her abilities) என்ற அளவில் மதிப்பிடுவது அவசியமாகிறது. மேலாலர், தன்னை, தான் மதிப்பீடு செய்யும் நபரின் இடத்தில் பொருத்திப் பார்த்து முடிவெடுப்பதும் அவசியமாகிறது. இதற்கு ஒரு மேற்கொள்:

தங்க நகைகள் செய்யும் ஆச்சாரி, தங்கத்தை சுத்தப்படுத்த, அதை நெருப்பிலிட்டு உருக்கி, அதிலிருந்து மாசுகளை நீக்குவதை நாம் பார்த்திருப்போம். தங்கத்தை நெருப்பிலிடும்போது, எந்த நிலையில், அத்தங்கம் மாசற்ற தன்மையை (purified state) அடைகிறது என்பதை கண்டுபிடிக்க அந்தக் காலத்து ஆச்சாரி ஒரு டெக்னிக் வைத்திருந்தார். அதாவது, உருக்கப்பட்ட தங்கத் துளியில், ஆச்சாரியின் முகம் துல்லியமாகத் தெரியும்போது, அத்தங்கமானது (நகைகள் செய்வதற்கு ஏற்ற வகையில்) மாசற்ற நிலையை அடைகிறது என்பது ஆச்சாரி அனுபவத்தில் கண்ட உண்மை. இது நம்ம அப்ரைசலுக்கும் பொருந்தும்.

2. அப்ரைசலின்போது, மதிப்பீடு செய்யப்படும் நபரின் பழைய அனுபவ திறமையை வைத்து அல்லது புறத்தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிடுதல் புத்திசாலித்தனமான விஷயம் அல்ல என்பதற்கு ஒரு அழகான மேற்கோள் காட்டி, அந்த பயிற்சியாளர் விளக்கினார்.

ஒருவர் சந்தைக்கு மாடு வாங்கச் சென்றார். அங்கு விற்பனைக்காக, இருந்ததிலேயே வலிமையான, ஒரு எருதை கண்டவுடன், அதை விற்க முற்பட்டவரிடம் சென்று (எருதின் பற்களையெல்லாம் சோதித்து விட்டு) விலை கேட்டார். குறைந்த விலை என்று பட்டவுடன், உடனே அதை வாங்கி, ஓட்டிச் சென்றார்.

பார்க்க திடகாத்திரமாக இருந்த அந்த எருதானது, ஒரு 30 அடி நடந்தவுடன் நின்று விட்டது. சற்று ரெஸ்ட் எடுத்து விட்டு, மீண்டும் 30 அடி நடை, ஓய்வு, மீண்டும் 30 அடி நடை, ஓய்வு, என்று அதை விலை கொடுத்து வாங்கியவரை பேஜார் பண்ண ஆரம்பித்தது. கடுப்பான அம்மனிதர், மீண்டும் சந்தைக்குச் சென்று, அதை விற்றவரிடம், அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்ட, விற்றவரோ, "ஐயா, அந்த எருது, மாநகராட்சி குப்பை வண்டியை இழுக்க பயன்படுத்தப்பட்டது, அதனால் தான் அந்த நினைப்பிலேயே இப்படிச் செய்கிறது. போகப் போக சரியாகி விடும்!" என்று கூறினாராம் :)

3. பணி புரியும் இடம் (office) என்பது மனதுக்கு சந்தோஷத்தையும், உத்வேகத்தையும் தரும் வகையில் அமைதல் அவசியம், ஆனால், பெரும்பான்மை அவ்வாறு அமைவதில்லை என்பதை ஒரு statistics கொண்டு வேடிக்கையாக விவரித்தார்.

ஆசியாவிலேயே சிறந்ததாகக் கருதப்படும் நாராயண ஹிருதயாலயா என்ற மருத்துவமனை ஓர் ஆய்வு நடத்தியதில், அந்த மருத்துவமனைக்கு எடுத்து வரப்படும் இதய நோய் சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பான்மையினர், திங்கள் கிழமை தான் ஹார்ட் அட்டாக்குக்கு உள்ளாகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது! அதாவது, வார விடுமுறைக்குப் பின், பலரும் பணிக்குத் திரும்பும் நாள் திங்கள் தானே :) அன்று, வொர்க் பிரஷர் பொதுவாக சற்று அதிகமாக இருத்தல் இயல்பானது தானே!

Children generally walk to school, but run back home என்று ஆங்கிலத்தில் கூறப்படுவது, குழந்தைகளுக்கு வீட்டின் மேல், பெற்றோர் மேல் உள்ள வாஞ்சையும், நாட்டமும் பள்ளியில் பால் இருப்பதில்லை என்பதை உணர்த்துகிறது!

4. Empowerment என்பது மிகத் தவறாக புரிந்து கொள்ளப்படும் வார்த்தை என்று அந்த பயிற்சியாளர் கூறினார். அதாவது, பொதுவாக எண்ணப்படுவது போல, ஒருவருக்கு பொறுப்புகளும், அதிகாரமும் (responsibility and authority) வழங்கி அவரை empower செய்ய முடியாது! அந்த நபரது அறிவு, ஆற்றல், அனுபவம் சார்ந்த சுயபலத்தை அவர் உணரும்படி செய்வதும், அவரது சுய ஊக்கத்தை வெளிவரச் செய்வதுமே Empowerment எனப்படும் என்று நச்சென்று கூறினார்.

5. Hewlett Packard (HP) நிறுவனத்தின் motto வாசகங்களில் ஒன்று, சற்று விசித்திரமாக இருந்தாலும், empowerment-ஐப் பற்றிப் பேசும்போது, அதன் தாக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
Every Employee has the RIGHT to committ a mistake!
அதாவது, ஒரு பணியாளர் தனது comfort வட்டத்திலிருந்து, courage வட்டத்திற்குச் செல்ல, இந்த 'தவறு செய்வதற்கான அனுமதி' அவசியமாகிறது :) அவரது பணிசார் (career) வளர்ச்சிக்கும் அது பெரிதளவில் உதவுகிறது!

ஒரு பணியாளரை அப்ரைசல் செய்யும்போது, பொதுவாக, அவரது வெற்றிகள், comfort வட்டத்திலும், அவரது தோல்விகள் (என்று மேலாளர் கருதுவது) courage வட்டத்திலும் பெரும்பாலும் அமைகின்றன. ஒரு மேலாளர், அப்ரைசலின் போது இதை மனதில் கொண்டு செயல்படுவது அவசியம்!

இந்தக் கட்டுரையை எனது அடுத்த பதிவில் தொடர்கிறேன், வாசித்தமைக்கு நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 323 ***

12 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

As usual, my comment will always be the first comment :)))

இலவசக்கொத்தனார் said...

இதை எல்லாம் ஆங்கிலத்தில் எழுதித் தந்தா நம்ம டேமேஜருக்கு ஒரு காப்பி குடுத்திடலாம்.

enRenRum-anbudan.BALA said...

கொத்ஸ்,
//இதை எல்லாம் ஆங்கிலத்தில் எழுதித் தந்தா நம்ம டேமேஜருக்கு ஒரு காப்பி குடுத்திடலாம்.
//
ஆங்கிலத்திலேயும் எழுதி ஒரு பதிவு போட்டாப் போச்சு :)

சீரியஸாக் கேட்கறேன், வேணுமா ???

Vino said...

Bala sir,

This is really preety good post....


///டேமேஜருக்கு oru copy...

had hearty laugh at it...

said...

எத்தனைதான் சொன்னாலும், அல்லது எத்துணை முறைதான் அப்ரெய்சல் பண்ணினாலும், இப்போதய டிரெண்ட் சண்டை என்றாகிவிட்டது. உடனடியாக பணிமாற்றம், பிராஜெக்ட் மாற்றம் அல்லது கம்பெனி மாறுவது. எங்கு சென்றாலும் இதேதான் என்பதை தற்போதய இளம் வல்லுனர்கள் என்று உணர்வார்களோ.

-L-L-D-a-s-u said...

தாம் பெற்ற இன்பத்தை பகிர்ந்துகொணடதற்கு நன்றி.. நேரமிருந்தால் ஆங்கிலத்தில் எழுதவும்..
ஃபார்வர்ட் பண்ண கை அரிக்கிறது

வடுவூர் குமார் said...

வலைப்பூவில் பதியவேண்டுமே என்று குறிப்புகள் எடுத்து இங்கு போட்டதற்க்கு நன்றி..
கட்டுமானத்துறையில் இதெல்லாம் அவ்வளவாக இல்லை,அப்படி இருந்தாலும் அது அப்பட்டமான கண் துடைப்பு என்ற எண்ணம் அந்த கம்பெனியில் வேலை செய்த 2 வது வருடமே வந்துவிடும்.
ஏனென்றால்,இங்கு எல்லாமே "முடிவு செய்யப்பட்டு விட்டது"!!

enRenRum-anbudan.BALA said...

வினோ, எல்.எல்.தாஸு, அனானி, வடூவுர் குமார்,
வாசிப்புக்கும், கருத்துக்கும் நன்றி.


LL Dasu,
Will publish an English version soon ! Copyrights are reserved :)

Kumar,
I don't know much about your industry!

பெத்தராயுடு said...

Good one dude.

dondu(#11168674346665545885) said...

//அந்த மருத்துவமனைக்கு எடுத்து வரப்படும் இதய நோய் சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பான்மையினர், திங்கள் கிழமை தான் ஹார்ட் அட்டாக்குக்கு உள்ளாகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது!//
நான் கேள்விப்பட்ட இன்னொரு இடத்தில் இம்மாதிரி நடந்தது.

அந்த மருத்துவ மனையில் ஐ.சி.யூ.வில இருந்த எட்டாம் எண் படுக்கையில் இருந்த நோயாளி யாராக இருந்தாலும் ஞாயிறு காலை 8 மணிக்கு உடல் நலம் குன்றி இறந்து விடுவார். பிறகுதான் கண்டு பிடித்தனர் காரணத்தை. அதாவது ஞாயிறுதோரும் அந்த இடத்தை வாக்குவம் க்ளீன் செய்ய வரும் பெண்மணி 8 ஆம் நம்பருக்கான இணைப்பை எடுத்து விட்டு அந்த இடத்தில் தனது வாக்குவம் க்ளீனரை பொருத்துவாராம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

//பெத்த ராயுடு said...
Good one dude.
//
Thanks, Boss !

Dondu Sir,
Thanks for the ADDITIONAL information :)

ப்ரசன்னா said...

பாலா

மிக அருமை. பயனுள்ள பதிவு

//ஆங்கிலத்திலேயும் எழுதி ஒரு பதிவு போட்டாப் போச்சு :)

சீரியஸாக் கேட்கறேன், வேணுமா ???//

சீரியஸாச் சொல்லுறேன்.. வேணும். நன்றி

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails